கொரோனா நோய் தொற்று காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை, வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். அதனை ஏற்று, சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு திரையரங்குகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.
சென்னையை பொருத்தவரை புரசைவாக்கம், மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடிய ஒரு பகுதி. அந்தப் பகுதியில், சரவணா ஸ்டோர் கடை அதிகப்படியான மக்கள் கூடக் கூடிய இடம். எனவே சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதனை ஏற்றுக்கொண்ட சரவணா ஸ்டோர் நிர்வாகம், அந்த கடையை மூடியிருக்கிறார்கள். தற்போது, கடையில் இருந்த அனைத்து வாடிக்கையாளர்களும் பின்பக்கம் வழியாக வெளியேற்றப்பட்டு, புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post