ஐந்தறிவு விலங்காக இருந்தாலும், அன்பை அளவின்றி கொட்டி கொடுப்பதில் நாய்களுக்கு நிகரில்லை. மனிதர்களுடன் இணக்கமாய் பழகுவது, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது என அவற்றின் சிறப்பு பண்புகளின் பட்டியல் நீள்கிறது. இது குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்.
நாய் நன்றி உள்ள விலங்கு. ஒரு நண்பனைப்போல மனிதர்களோடு பழகும் பண்பு கொண்டது. குட்டியில் இருந்து அதை நற்பண்புடன் வளர்த்தால் வீட்டில் ஒரு நபராகவே மாறிவிடும். அதேபோல், காவல் துறையில், காவலர்களுக்கு இணையாக செயல்படுவதில், மோப்ப நாய்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய மோப்ப நாய்கள், கெனல் கிளப் இந்தியா என்ற நிறுவனத்தால் சான்றிதழை பெற்றிருந்தால் மட்டுமே, காவல்துறை மோப்ப நாய்பிரிவில் இடம்பெற முடியும். அப்படிப்பட்ட பெருமைக்குரிய நாய்கள், நமது காவல்துறையின் பாதுகாப்பு பணிகளுக்கும், குற்றங்களை கண்டறியவும், முன்கூட்டியே தடுப்பதிலும், ஒரு மைல் கல்லாக திகழ்கிறது.
தமிழக காவல்துறையில், மோப்ப நாய்களுக்கு மூன்று பிரிவுகள் உள்ளன. வெடிகுண்டு, போதைப்பொருட்கள், கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு என்று தனித்தனியாக பயிற்றுவிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ராடர் போன்ற 28 வகைகள் உள்ளன.
மோப்பநாய்களை குழந்தையை கவனிப்பது, பராபரிப்பது போல பராமறிக்கிறார்கள். பால், உலர்ந்த பழவகைகள், முட்டை, பீப் – காய்கனி – அரிசி கலந்த உணவுகளை வழங்குகின்றனர்.
Discussion about this post