பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசராவையொட்டி, ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் கவுர் சித்துவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடியும் தருவாயில் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் உருவ பொம்மை எரிவதை தொடர்ந்து அதனை பட்டாசு வெடித்து அங்கிருந்தவர்கள் கொண்டாடியுள்ளனர்.
அப்போது, அந்த வெடிச்சத்தம் மற்றும் புகை மண்டலத்தால், தண்டவாளத்தில் ரயில் வருவதை பார்க்கவோ, ஒலியை கேட்கவோ முடியாத சூழல் நிலவியுள்ளது.
இதனால் அதிவேகமாக வந்த ரயில் நொடிப்பொழுதில் 60 பேரின் உயிரை பறித்துச் சென்றுவிட்டது. 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இவ்வளவு அதிகமான மக்கள் தண்டவாளம் அருகே கூடும் போது, ரயில்வே நிர்வாகமோ, காவல்துறையோ அதனை ஏன் கண்டு கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமும் இந்த கோர விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
Discussion about this post