சாம் கரனின் அனல் பறந்த பந்து வீச்சில் பஞ்சாப் அணியிடம் டெல்லி சரணடைந்தது
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது.முதலில் ஆடிய பஞ்சாப் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் தரப்பில் லோகேஷ் ராகுல், மற்றும் கெயிலுக்கு பதிலாக இறங்கிய சாம் கரண் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். ராகுல் 15 ரன்கள், சாம் கரண் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவருக்கு பின் வந்த மயங்க் அகர்வாலும் 6 ரன்னோடு வெளியேறினார். இதையடுத்து 39 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மில்லர் 30 பந்துகளில் 43 ரன்களை எடுத்து வெளியேறினார். டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் ரபடா, லேமிச்சேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியில் தவான் 30 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். ஷிரேயஸ் ஐயர், 28 ரன்களை எடுத்து அவுட்டானார்.. அடுத்ததாக ரிஷப் பந்த்-காலின் இங்கிராம் ஜோடி ரன்களை குவித்தது. 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 39 ரன்களை எடுத்த ரிசப் பந்த், ஷமி பந்தில் போல்டானார். 38 ரன்கள் எடுத்த இங்கிராம், சாம்கரண் பந்தில் வெளியேறினார்.
இதையடுத்து வந்த வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 19.2 ஓவர்களில் டெல்லி அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது .பஞ்சாப் தரப்பில் சாம் கரண் அபாரமாக பந்துவீசி 11 ரன்களை மட்டுமே தந்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.
Discussion about this post