திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மடத்துக்குளம் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முருகசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதமும், வீரபாண்டி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுப்ரமணி என்பவருக்கு ஏழு வருட சிறைத்தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோன்று, பெருந்தொழுவு பகுதியில் 17வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவருக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும், ஐந்தாயிரம் அபராதமும் விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post