முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைய தீர்மானம்: புகழேந்தி

சேலத்தில் அமமுகவின் முக்கிய நிர்வாகியான புகழேந்தி தலைமையில் நடைபெற்ற, அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் இணைவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் தனியார் விடுதியில் நடைபெற்ற அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி பெற்று தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அமமுகவில் முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளதால் அமமுகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிற எடப்பாடி பழனிச்சாமி முன்னலையில் அனைவரும் அதிமுக இணைவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

Exit mobile version