சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பிய நபருக்கு மர்ம காய்ச்சல் இருப்பதால், அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், சீனாவில் உள்ள வெளிநாட்டினர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறு ஊருக்கு திரும்பும் மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதா என தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி அரியங்குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் 3 சீனர்களுடன் பழகி வந்துள்ளார். தற்போது புதுச்சேரி திரும்பியுள்ள அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், முடிவுகள் வந்த பிறகே, அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கூறப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post