பிரான்ஸ்-ஜெர்மனி இடையே இருந்த நீண்டகால பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 1963ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை கொண்டாடும் விதமாக புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் லேசர் கலைநிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். இதுபோன்ற மேற்கத்திய கலாச்சார கலை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை வெகுவாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்சு துணைத்தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் சென்னையில் உள்ள ஜெர்மனி தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post