புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தி அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுபானங்கள் மீதான வரியை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுபானங்கள் மீது 25 சதவீதம் சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாராயத்தின் மீதான வரியும் 20 சதவீதம் உயர்த்தி அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு பிறகு இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. புதிய வரி விதிப்பால் மதுபான விலை, தமிழகத்தில் விற்கப்படும் மதுபானத்தின் விலைக்கு இணையாக உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post