புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் அளித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணிகள் முடங்கி விட்டதாகவும், புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் விளக்க வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.