புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பான 2ஆவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 11ஆம் தேதி சிவகங்கை தொகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். 10ஆம் தேதி காஞ்சிபுரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஆலந்தூர் தொகுதி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, வைகைச்செல்வன், விளாத்திகுளம் தொகுதி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, குன்னம் தொகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம், அருப்புக்கோட்டை தொகுதி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வாணியம்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர். மார்ச் 11ஆம் தேதி விழுப்புரம் தொகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், மதுரவாயல் தொகுதி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். மார்ச் 12ஆம் தேதி கள்ளக்குறிச்சி தொகுதியில் நடைபெற உள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திருவொற்றியூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, நன்னிலம் தொகுதி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அண்ணா நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
Discussion about this post