ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசு, தமிழகத்தை தனியார் துறைகளால் நிரப்ப தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக பொதுப் போக்குவரத்துக்கு முழுக்கு போடுவதை பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது.
திமுக அரசானது நாட்டை தனியாருக்கு தாரை வார்ப்பதாக மத்திய அரசை நோக்கி பல முறை தொண்டை கிழிய கத்தியுள்ளது. ஆனால் அதே வேலையை தற்போது ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.
திமுக அரசு, தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்து சதி திட்டம் தீட்டி வருகிறது. ஏற்கனவே பொதுத்துறை நிறுவனங்களில் தனியாரின் மூலம் ஊழியர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பணிமனைகளில் ஓட்டுனர்களை, முதலமைச்சரின் குடும்ப உறுப்பினரின் ஸ்டார் வால்ட் என்ற நிறுவனத்தின் மூலம் நியமித்துள்ளது. இந்த விசயத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமே தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. தற்போது சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக பேரிடி ஒன்றை இறக்கியுள்ளது
முதல் கட்டமாக மாநகரப் பேருந்து வழித்தடங்களில் 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மேலும் 500 பேருந்துக்களை இயக்கவும் ஆளும் திமுக அரசு முடிவெடுத்துள்ளது.
அரசு மாநகர போக்குவரத்தில் மொத்தம் 3436 பேருந்துக்கள் இயங்கி வருகின்றன. பணிமனையில் நிறுத்தி வைக்கபட்டிருக்கும் பழைய பேருந்துகளை சரிசெய்யாமல் அதை கழிவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தனியார் மயத்தை தொடங்கிவிட்டது. தற்போது கிராஸ் காஸ்ட் கான்ராக்ட் என்ற முறையில் தனியார் மூலம் பேருந்து சேவை வழங்க முடிவு செய்துள்ளது.
தனியார் நஷ்டத்தில் சென்றால் இழப்பீடு அரசு தரப்பிலும், அதிக லாபத்தில் சென்றால் பங்கு அடிப்படையில் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசின் கருவூலத்தை தாங்கிப் பிடிப்பதில் பொதுப் போக்குவரத்துக்கு தனியிடம் உண்டு. தனியார் மயமாக்குவதை தொடங்கி வைத்து, கோபால புரத்தின் கருவூலத்தை தாங்கிப் பிடிப்பதற்கான வேலைதான் இது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்த காண்ட்ராக்டும் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
Discussion about this post