தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய துவங்கி உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் வரும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகள் அறிவித்திருந்தாலும் முன்களப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் மற்ற பணிகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக பேருந்து சேவையை துவக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வர துவங்கின. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் பேருந்து சேவையை துவக்குவது குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. முதலில் மாவட்டத்துக்குள் குறைந்த அளவில் பேருந்து சேவை துவங்க ஆலோசிக்கப்பட்டதாகவும், 21 ஆம் தேதிக்கு பிறகு பேருந்து இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.