மண்பாண்டங்களில் சமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்

நலிந்து வரும் மண்பாண்டத் தொழிலை பாதுகாக்க கடந்த காலங்களைப்போல மீண்டும் பாரம்பரிய மண்பாண்ட சமையலுக்கு மக்கள் மாற வேண்டும் என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மற்றும் காவாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் மண்பாண்டப் பொருட்கள் செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். நலிந்து போன தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கவும், கடந்த காலங்களை போல பாரம்பரியமாக, சுகாதாரமான உணவுகளை சமைக்க, மண்பாண்டங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், முன்னோர்கள் மண்பாண்டங்களில் சமைத்து உண்டதால் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்ந்ததாக தெரிவித்ததாகவும், தற்போது நாகரீக மோகத்தால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version