மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் இணைப்புத் தொடர்பாகப் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை ஒன்றிணைத்து நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி ஆகியவற்றின் செயல்பாட்டுக்குக் கூடுதல் முதல் வழங்கவும் முடிவு செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பை அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் நிதித்துறைச் செயலாளர் ராஜீவ்குமாரும் கலந்துகொள்கிறார்.
Discussion about this post