ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்பட்டதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கொங்கர்பாளையம், கொளப்பலூர், அளுக்குளி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டன. கொளப்பலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிட்டில் உருவான புதிய ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது. கொங்கர் பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
Discussion about this post