ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே அமைந்துள்ள மகாவீரர் சிலையை பாதுகாக்க தொல்லியல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே மேலக்கிடாரம் கிராமத்தில் பழமைவாய்ந்த மகாவீரர் சிலை திறந்தவெளியில் அமைந்துள்ளது. கருங்கல்லால் ஆன இந்த சிலை பாண்டிய மன்னர்கள் சமண சமயத்தை தழுவியபோது அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சிலையை அப்பகுதி மக்கள் மதங்களை கடந்து வழிபட்டு வருகின்றனர். விலை மதிக்க முடியாத இந்த சிலை குறித்த ஆய்வை மேற்கொள்ளவும் சிலையை பாதுகாக்கவும் தொல்லியல் துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post