தெலங்கானாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, மக்கள் அதிக கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள் போன்றவைகள் நேற்று முதல் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post