மழை நீரை சேகரிப்பதில் அரசுக்கு எந்தளவுக்கு பொறுப்பு உள்ளதோ, அதே அளவிற்கு பொதுமக்களுக்கும் உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் தெரிவித்தார்.
நீர் நிர்வாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எக்ஸ்னோரா அமைப்பு சார்பாக சென்னை பெரியமேட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நடராஜ், மயிலாப்பூர் பகுதிகளில் 100 இடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு பொதுமக்களும் தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து அதற்கு நிதி அளித்து வருவதாக கூறிய அவர், வரப்போகும் பருவமழையையாவது வீணாக்காமல், நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என நடராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post