டெல்லியில் பரவலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் சமீப காலமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக நேற்றைய தினம் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்தநிலையில் இன்று காலை டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீரென பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து சற்று இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே டெல்லியில் காற்று மாசு 153 புள்ளியாக குறைந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Discussion about this post