தந்தை வழியில், முதலமைச்சர் முதல் பெண்கள் வரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் உதயநிதி ஸ்டாலின் போக்கிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பெண்களின் சுயமுன்னேற்றப் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 13,16,00,000 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார். அப்போது, பல்வேறு வகையிலும் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைகள் மக்களை நேரடியாகப் பாதிப்பதாகவும், முதலமைச்சரையும் பெண்களையும் இழிவாகப்பேசுவதை உதயநிதி ஸ்டாலின் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
நடிகர்களைப் பார்க்க கூட்டம் கூடும் என்றும் ஆனால் அவைகள் அனைத்தும் வாக்காக மாறாது என்றும் கூறிய அமைச்சர், அதேபோல கமல்ஹாசனை பார்ப்பதற்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது எனவும் தெரிவித்தார்.
Discussion about this post