கல்வித்தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சங்கம் 2019 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ஐந்தாம் வகுப்பு, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறை பள்ளி மாணவர்களுக்குப் பெரிய அழுத்தத்தை உண்டாக்காது எனக் கூறினார். பொதுத் தேர்வு முறையால் கல்வித் தரத்தில் நல்ல மாற்றம் வரும் எனக் கூறிய அவர் கற்றல் முறையும், கற்பித்தல் முறையும் சிறப்பாக இருக்கும் என்றார்.
Discussion about this post