உணவுத் திருவிழா, எதிர்பார்த்ததை விட வரவேற்பு பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். பொதுமக்கள் மீண்டும் உணவுத் திருவிழாவை நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக கூறிய அவர், வரும் நாட்களில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் உணவுத் திருவிழாவை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இயற்கை உணவுகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உணவுத் திருவிழா நடத்திய தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். உணவுத் திருவிழாவை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இளம் வயதில் தான் உண்ட பாரம்பரிய உணவுகளாலேயே தற்போதும் ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழக அரசு நடத்தும் உணவுத் திருவிழாவால், பொதுமக்கள் மத்தியில் சரிவிகித உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் இதுபோன்ற திருவிழாவைத் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
Discussion about this post