நாகை மாவட்டம் தரங்கம்பாடியில், சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை அருகே, ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை உள்ளது. இக்கோட்டை, வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இதனால், இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.
ஆனால், இங்கு சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சம் எதுவும் இல்லை என சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், இங்கு சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
Discussion about this post