தருமபுரி மாவட்டம், காட்டோடையில் வீணாக செல்லும் உபரி நீரை தடுத்து 16 ஏரிகளுக்கு நீர் ஆதாரத்தை வழங்கக்கூடிய வகையில் சாஸ்திரிமுட்லு பகுதியில் அணை கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எல்லையில் அமைந்துள்ள மாரண்டஅள்ளி, கெண்டேன அள்ளி பகுதியில் காட்டோடையில் அமைந்துள்ளது சாஸ்திரிமுட்லு ஏரி. மழைக்காலங்களில் மலைகளில் இருந்து பெறப்படும் உபரி நீர் காட்டோடையின் மூலம் ஏரியின் வழியாக சின்னாறு மற்றும் பல ஏரிகளுக்கு நீர் ஆதாரத்தை தந்துள்ளது. இங்கு அணைகட்ட வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், காவிரி பிரச்சனை முடிந்த பிறகு அணை கட்டலாம் பொதுப்பணி துறை தெரிவித்தாக கூறப்படுகிறது.
மழைக்காலங்களில் கிடைக்கும் நீர் காட்டோடையின் மூலம் வீணாகச் செல்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவாக மாரண்டஅள்ளி பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பெய்தும் கூட மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, சாஸ்திரிமுட்லு பகுதியில் அணை கட்டி, சின்னாறு வழியாக 16 ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post