கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் குறைவான அளவில் படுக்கை வசதி உள்ள நிலையில், 150 படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி தலைமையில் ஆலோசனையில் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆட்சியர் கிரண் குராலா உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, மாவட்டத்தில் காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை நிலவரம் குறித்து திரையில் காண்பிக்கப்பட்டது.
அதில், 18ம் தேதி நிலவரப்படி அரசு மருத்துவமனையில் 6 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனையில் 19 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் இருப்பதாக காண்பிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பு அதிகாரி, 150 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளதாக தெரிவித்தார்.
இதனால், படுக்கை வசதிகளின் உண்மை நிலவரம் குறித்து தகவல் தெரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்
Discussion about this post