தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் சிவன் கோயில் அருகே உள்ள குளத்தை சமூக ஆர்வலர்கள் தூர்வாரியுள்ளனர்.
தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக குடிமராமத்து பணி என்ற திட்டத்தை தொடங்கி, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு, சென்னையில் மட்டும் 277 நீர் நிலைகளை தூர் வார திட்டமிடப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை வளசரவாக்கம் சிவன் கோயில் அருகே உள்ள குளத்தை மழை நீரை சேமிக்கும் விதமாக சமூக ஆர்வலர்கள் சேர்ந்து தூர்வாரியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், சிறு சிறு குளங்களை தன்னார்வ அமைப்புகள் ஒன்றுகூடி தூர்வாரும் பணி செய்து வருவதை, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.