ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV C-50 ராக்கெட் 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
பூமியை கண்காணிக்கும் பணிக்காக ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து, ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post