நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி- சி47 ராக்கெட்

இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்திலிருந்து நாளை காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் புவியியல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோள் இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கை கோள்கள் பூமியிலிருந்து சுமார் 509 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருந்து பூமியை கண்காணித்து புகைப்படங்கள் எடுத்தனுப்பும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.

Exit mobile version