இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்

ஜிசாட்-29 என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை 5.08 மணிக்கு ஜிசாட்-29 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 27 மணி நேர கவுன்டவுன் நேற்று பிற்பகல் 2.50 மணிக்குத் தொடங்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோள், தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்ட உயர் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தகவல் தொடர்பிற்கு இந்த செயற்கை கோள் முக்கிய பயனாற்றும் என கூறப்படுகிறது.

Exit mobile version