பிஎஸ்எல்வி – சி45 ராக்கெட் மூலம் இஸ்ரோ உருவாக்கியுள்ள எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. ராணுவ பயன்பாட்டிற்காக எமிசாட் என்ற நவீன மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்கள் பிஎஸ்எல்வி – சி45 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.27 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
மின்காந்த அலைக்கற்றைகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்ட, எமிசாட் செயற்கைகோள் 436 கிலோ எடைகொண்டது. உலகிலேயே முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்று வட்ட பாதைகளில் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டன. அதன்படி தரையில் இருந்து புறப்பட்டு 749 கிலோ மீட்டரை அடைந்ததும் எமிசாட்டும் , 505 கிலோ மீட்டர் தூரத்தில் 220 கிலோ எடையுடைய 28 வெளிநாடுகளின் செயற்கைகோள்களும் நிலைநிறுத்தப்பட்டன.
இதையடுத்து இறுதியாக பிஎஸ் 4 இயந்திரத்தை 3 முறை கட்ஆப் செய்து அதில் வைக்கப்பட்டுள்ள ஆய்வு சாதனங்கள் 485 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டன. மின்காந்த அலைக்கற்றைகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்ட, எமிசாட் செயற்கைகோள் 436 கிலோ எடைகொண்டது.
உலகிலேயே முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்று வட்ட பாதைகளில் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டன. அதன்படி தரையில் இருந்து புறப்பட்டு 749 கிலோ மீட்டரை அடைந்ததும் எமிசாட்டும் , 505 கிலோ மீட்டர் தூரத்தில் 220 கிலோ எடையுடைய 28 வெளிநாடுகளின் செயற்கைகோள்களும் நிலைநிறுத்தப்பட்டன.
இதையடுத்து இறுதியாக பிஎஸ் 4 இயந்திரத்தை 3 முறை கட்ஆப் செய்து அதில் வைக்கப்பட்டுள்ள ஆய்வு சாதனங்கள் 485 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
Discussion about this post