பிஎஸ்எல்வி சி- 45 ராக்கெட், 29 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவின் எமிசாட் செயற்கைக்கோள் மற்றும் 4 வெளிநாடுகளின் 28 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான 24 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு ஆந்திர மாநிலம் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி 45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் பிஎஸ்எல்வி – சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ளன.
Discussion about this post