நாட்டின் எல்லை பகுதியை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள் மற்றும் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் சாட்டிலைட் ஆகியவை ,வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, நேற்றிரவு 11.37 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம் சாட் என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இஸ்ரோ இதுவரை 45 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில் முதன்முறையாக செயற்கைகோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் இந்த ராக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post