60 குடும்பங்களை விலக்கி நடத்தும் கும்பாபிஷேக விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே செண்பகமா தேவி பகுதியில், 65 குடும்பங்களுக்கு சொந்தமான ஸ்ரீஅண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், கோவில் தற்காலிகமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி அளித்திருப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கும்பாபிஷேகத்தை அனைத்து குடும்பங்களையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும், மேலும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவதை கண்டித்தும் கோவிலின் முன்பாக, 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version