திருப்பூரில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் ஐயப்பன் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து தமிழர் கட்சியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாக்களிக்க பணம் பெற வேண்டாம் எனவும், நாட்டை காப்பவர்கள் யார் என சிந்தித்து வாக்களிக்க கோரியும் இந்து தமிழர் கட்சி மாநிலத் தலைவர் ராம ரவிக்குமார் தலைமையில் பக்தர்களுக்கு பாதபூஜை செய்து அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கேலி செய்து, கிண்டல் செய்து அரசியல் நடத்தி வரும் இந்து விரோத திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் அவர்கள் உறுதி ஏற்றனர்.
Discussion about this post