தமிழக வணிகர்களின் பொருட்களை சந்தைபடுத்த மட்டும் ‘மெரினா’என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வணிகர்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதால் தமிழ்நாட்டில் உள்ள சிறு வணிக நிறுவனங்கள் பெரிதும் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு சிறு வணிகர்களின் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு ’மெரினா’ என்ற புதிய செயலியை தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிமுகப்படுத்தினார்.இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.நாம் இருக்கும் இடத்திலிருந்து 4.கி.மீ தொலைவில் இருக்கும் கடைகளில் ஆர்டர் செய்தால் 48 நிமிடத்தில் டெலிவிரி செய்யப்படும்.அதோடு பொருட்களில் ஏதேனும் சேதம் இருந்தால், அதனை தெரிவிப்பதற்கு கடை உரிமையாளர்களை தொடர்பு கொள்வதற்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலி மூலம் பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட பயன்பெற முடியும்.
Discussion about this post