வணிக ரீதியான செயற்கை கோள்கள்கள் மூலம் இஸ்ரோவுக்கு ரூபாய் 6 ஆயிரத்து 289 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக நவீன செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ, தனியார் செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்களையும் விண்ணுக்கு அனுப்பி வைக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோவின் வணிக பிரிவான ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் வணிக ரீதியாக 239 செயற்கை கோள்களை அனுப்பி உள்ளது. இதன் மூலம் ரூ.6 ஆயிரத்து 289 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post