பொதுவாக சமூக வலைதளங்களில் சாதாரண மனிதன் ஒரு போட்டோவை பதிவிட்டாலே உடனே வைரலாகிவிடுகிறது.அப்படி இருக்கும் நிலையில் பிரபலங்களின் புகைப்படம் வைரலாகாமல் இருக்குமா என்ன?..இப்போ மீம் கிரியேட்டர்ஸ் ஃபோகஸ் எல்லாம் பிரியங்கா ஷோப்ரா ஹேர்ஸ்டைல் மேல தான் இருக்கு.சும்மா வித்தியாசமான மீம்ஸ்களை தெரிக்கவிடுகின்றனர்.
நேற்று நியூயார்க்கில் ’மெட் கலா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்காவின் புகைப்படம் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அவரது ஹேர்ஸ்டலை ’யோகி பாபுவுக்கே டஃப் கொடுக்கும் பிரியங்கா’,வீரப்பனின் மீசையாக பிரியங்காவின் தலைமுடி, எப்படி இருந்த பிரியங்கா,இப்படி ஆயிட்டங்களே என அவரில் புகைப்படங்களை பல காமிக் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.அது பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாவும் உள்ளது.எத்தனை மீம்ஸ் போட்டு பிரியங்காவை தாக்கினாலும் இதெற்கெல்லாம் அவர் சிறிதும் அசரக்கூடியவர் அல்ல என்பதை அனைவரும் அறிவோம்.
Discussion about this post