காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி, கங்கை நதிக்கரையில் 140 கிலோ மீட்டர் தூரம் படகு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக் கட்சி அறிவித்துள்ளது
மக்களவை தேர்தலில் உ.பி.யில் தனித்து களம் இறங்கும் காங்கிரஸ் கட்சி கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளது. இதற்காக அக்கட்சி பிரியங்கா காந்தியை களம் இறக்கி உள்ளது. உத்திர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, கங்கை நதிக்கரையில் மூன்று நாட்கள் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் 18-ம் தேதி பிரயாக்ராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 140 கி.மீ. தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று அவர் பிரசாரம் செய்கிறார். கங்கா யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட்டில் முடிவடையும் என அக்கட்சி தெரிவித்துள்ளது
Discussion about this post