மயிலாடுதுறையில் பள்ளி மாணவன் ஒருவன், தொடர்ச்சியாக 45 நிமிடம் கண்ட பேருண்ட ஆசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்
மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மிஷாம் என்ற மாணவன் யோகா கற்று வந்துள்ளார். மாணவனின் தந்தை குழந்தைவேலு யோகா பயிற்சி பெற்றவர். சிறு வயது முதலே யோகா பயிற்சியில் மிஷாமை ஈடுபடுத்தி வந்துள்ளார். இதனால் மாணவன் மிஷாம் ஏற்கனவே அரை மணி நேரத்தில் 230 யோகாசனங்களை செய்து பரிசு பெற்றுள்ளார். தற்போது தனியார் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 45 நிமிடங்கள் கண்டபேருண்டாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 15 நிமிடங்கள் செய்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. புதிய சாதனையை நிகழ்த்திய மாணவனுக்கு நோபல் வோர்ல்ட் ரெக்காட் நிர்வாகிகள் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.
Discussion about this post