துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதி வார்டனை குத்திக்கொன்ற மாணவனை போலீசார் கைதுசெய்தனர் .
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் தனியார் வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளிகளை சார்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதி வார்டனாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் பணி புரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் பெரம்பலூரை சேர்ந்த மாணவன் அப்துல் ஹக்கீம் சரியாக படிக்காமல் பொறுப்பில்லாமல் இருப்பதாக மாணவனின் பெற்றோர்களிடம் விடுதி வார்டன் வெங்கட்ராமன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெற்றோர்கள் தனது மகனை நன்றாக படிக்குமாறு கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் வார்டன் அறைக்கு சென்று அங்கிருந்த வெங்கட்ராமனை கழுத்திலும் , இடுப்பிலும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில்
உயிருக்கு போராடிய வெங்கட்ராமனை அருகில் இருந்தவர்கள் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்ராமன் உயிரிழந்தார். இதையடுத்து மாணவன் அப்துல் ஹக்கீமை ஜெம்புநாதபுரம்
போலீசார் கைதுசெய்தனர். விடுதி வார்டனை மாணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post