தமிழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களால், தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை 640 கோடியை, உடனடியாக செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் உள்ள சிறுவகை மற்றும் பெருவகை கனிமங்களை வெட்டி எடுக்க தனிநபர், சிமெண்ட் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை விடப்படுகிறது. இதற்காக ஏல முறையில் நிலங்கள் தனியாருக்கு வழங்கப்படுகிறன. இந்த நிலையில், தனியார் நிலங்களுக்கு மட்டும் ஆண்டு இழப்பீட்டு தொகை வழங்கினால் போது, அரசு நிலங்களுக்கு வழங்க தேவையில்லை என்று 1999 ஆம் ஆண்டு மத்திய கனிமவள அமைச்சகம் ஆணை ஒன்றை பிறப்பித்தது. இதை காரணம் காட்டி தனியார் சிமெண்ட் நிறுவனங்கள், 20 ஆண்டுகளாக இழப்பீட்டு தொகையை தமிழக அரசுக்கு வழங்காமல் இருந்து வந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில், தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஆண்டு இழப்பீட்டு தொகை 640 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post