ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மத்தியச் சிறையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கைதிகள் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் கைதிகளிடையே போதைப்பொருள், புகையிலைப் பொருள், செல்பேசிகள் உள்ளனவா? என்பதைக் கண்டறியக் காவல்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜோத்பூர் சிறையில் கைதிகள் போதைப் பொருட்களை ஒருவருக்கொருவர் பரிமாறி விருந்து கொண்டாடியுள்ளனர். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளதை அடுத்துச் சிறைக் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Discussion about this post