தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் பேசினார். அப்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில் பிளாஸ்டிக் துணியால் செய்யப்பட்ட கோட்டை அவர் அணிந்திருந்தார். இந்த உடையானது கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த உடையை பிரதமருக்கு பரிசாக வழங்கியது. இதை தான் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு அணிந்திருந்தார்.

Exit mobile version