கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு மாநிலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற இடங்களில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் பல்வேறு கடைகள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு முடிவடைந்த பின் மாநிலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடந்த கூட்டத்தில், 9 முதலமைச்சர்கள் மட்டுமே, பிரதமரிடம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post