அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். சென்னை கிளாம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் எரிச்சக்தி திட்டங்களை துவக்கி வைத்தார்.
விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டிய மோடி, திருப்பூர்-அவிநாசிபாளையம் இடையேயான நான்கு வழிச்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார்.
அதேபோல், புகை மாசை குறைக்கும் நோக்கில் திருச்சி, கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களை இணக்கும், மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்தார். மேலும் எண்ணூரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு முனையத்தையும் திறந்து வைத்த அவர், எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க நிறுவனருமான எம்.ஜி.ஆரின் சிலையை கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாமக தலைவர், ராமதாஸ், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமாணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
Discussion about this post