மத்திய பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ரீவா பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில், சூரிய ஆற்றலில் இருந்து 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீவா சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 76 சதவிகிதம் மத்திய பிரதேச மாநிலத்திற்கும் 24 சதவிகிதம் டெல்லி மெட்ரோ நிறுவனத்திற்கும் வழங்கப்பட உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமான இதனை பிரதமர் நரேந்திரமோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Discussion about this post