பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
17வது மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக இன்று பிற்பகல் வாரணாசி செல்லும் மோடி, மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். 150 பகுதிகளில் சாலை வழியாக பயணித்து அவர் பரப்புரை மேற்கொள்கிறார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். இதைத்தொடர்ந்து, கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து, நாளை அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி வாரணாசியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post