பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புடன் பங்கேற்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக பிரதமர் மோடி ஹூஸ்டன் நகருக்கு வருகை தந்துள்ளார். இந்நிகழ்ச்சி இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹவுடி மோடி நிகழ்ச்சி முடிந்த பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்.இதில் இருநாட்டுக் கொடிகளை ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்ட கார்கள் ஊர்வலத்தில் பங்கேற்கின்றன.
Discussion about this post