பிரதமர் மோடி நல்ல நண்பர் என்றும், மிகச்சிறந்த பண்பாளர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கிறார். அப்போது, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ ஆயுதக் கொள்முதல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தை அவர் சுற்றிப்பார்க்க உள்ளார். மேலும், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்தநிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்திய சுற்றுப்பயணத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது நண்பர் என்றும், மிகச் சிறந்த பண்பாளர் எனவும் புகழாரம் சூட்டினார்.
Discussion about this post